இலங்கை நில அளவைத் திணைக்களம்
நில அளவைத் திணைக்களத்தில் நடைபெறவுள்ள பல உதவியாளர்கள் பாடநெறிக்கான ''தேசிய தொழில் தகைமை - 2 ஆம் மட்டம் (NVQ Level 2) பயிற்சிநெறிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்ளல் - 2021
01. நிலஅளவைத் திணைக்களத்தில் நில அளவையாளப் புல உதவியாளர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான தேசிய தொழில் தகைமை 2 ஆம் மட்டம் (NVQ LEVEL 2) பாடநெறிக்காக கீழ்க் கூறப்பட்டுள்ள தகைமைகள் உள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
(அ) நற்குண நன்னடத்தையுடையவராக இருக்க வேண்டும் ளூ
(ஆ) இலங்கையராக இருக்க வேண்டும் .
(இ) 18 வயதிற்கும் 45 வயதிற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும் ளூ
(ஈ) க. பொ. த. (சாதாரண தரப்) பரீட்சையில் இரண்டுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தளவு இரண்டு சிறப்புச் சித்திகளுடன் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். குறித்த பெறுபேற்றுப் பத்திரங்கள் விண்ணப்பப் பத்திரத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
02. இங்கு காட்டப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப்பத்திரத்திற்கு ஏற்ப(A4) அளவுத் தாளில் குறித்த விண்ணப்பப்பத்திரத்தை, விண்ணப்பதாரியே தயாரித்துக் கொள்ள வேண்டும். மேலும் சகல விண்ணப்பதாரிகளும் தங்களது விண்ணப்பப்பத்திரத்தில் தாங்களே தங்களது சொந்தக் கையெழுத்தில் விண்ணப்பத்தைப் பர்த்தி செய்து தங்களது வழமையான கையொப்பத்தை இட வேண்டும். சரியான முறையில் ப{ர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 9'X4' அளவு கடித உறையில் இட்டு இடது பக்க மேல் மூலையில் தான் விண்ணப்பிக்கின்ற பாடநெறியின் பெயர் ''NVQ LEVEL - 2 : 2020'' எனவும் குறிப்பிட்டு, 2020.12.28 ஆந் திகதிக்கு முன்னர் கீழ்வரும் முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.
03. குறித்த திகதிக்குப் பின்னர் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
04.
(அ) இந்தப் பாடநெறியானது சிங்களம்/ தமிழ் மொழிகளில் நடைபெறும்.
(ஆ) இந்தப் பாடநெறிக்குத் தகுதியானவர்கள் நேர்முகப் பரீட்சையொன்றின் மூலமே தெரிவு செய்யப்படுவர். மேலும்
விண்ணப்பதாரிகளின் தகைமை அடிப்படையிலும் தகுதியான மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தெரிவு செய்யப்படும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல், இலங்கை நில அளவைத் திணைக்களத்தின் உத்தியோகப{ர்வ இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
|APPLICATION| |GAZZETE| |POSTAL COVER|

Post a Comment (0)