தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சு
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்
பதவி வெற்றிடங்கள்
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தில் நிலவும் பின்வரும் பதவி வெற்றிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன .
முகாமையாளர் - 02
கல்வித்தகைமை : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பெறப்பட்ட முகாமைத்துவ முதுமானி பட்டத்துடன் ( வியாபாரம் | பெருளியல் / நிர்வாகம் ) 5 வருட அனுபவம் . இளமானி முகாமைத்துவ பட்டத்துடன் 10 வருட அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும் . வயதெல்லை : 35 ற்கு மேல்
கணக்காளர் - 02
கல்வித்தகைமை : பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகமொன்றிலிருந்து பொது நிர்வாகம் / வணிகநிர்வாகம் / வர்த்தகம் / கணக்கியல் / நிதி ஆகிய துறையில் ஏதாவது ஒன்றில் இளமானி பட்டத்துடன் அல்லது இலங்கை பட்டயக்கணக்காளர் நிறுவனத்தின் தேர்வு அல்லது UK ன் பட்டய நிறுவன மேலாண்மைக் கணக்காளர் இடைநிலை மட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் அல்லது இதற்கு சமமான வேறு தகைமைகள் இருத்தல் வேண்டும் . அனுபவம் : 05 வருட துறைசார் அனுபவம் . வயதெல்லை : 30 - 45 வரை
போதனாசிரியர் 09 ( அழகுக்கலை / ஹோட்டல் முகாமைத்துவம் படவரைஞர் / தச்சுவேலை / முன்பள்ளி ஆசிரியர் / தையல் பயிற்சி ( ஆண் ) / கைத்தொலைபேசி பழுதுபார்த்தல் மற்றும் பரதநாட்டியம் / சங்கீதம் )
கல்வித்தகைமை : கா.பொ.த ( சா / த ) பரீட்சையில் ஒரே தடவையில் கணிதம் , தமிழ் , உட்பட 4 பாடங்களில் திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தியும் கா.பொ.த ( உ / த ) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி மற்றும் ஒவ்வொரு பதவி தன்மைக்கேற்ப மூன்றாம் நிலை , தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற்திறன் மட்டம் ( NVQ level 05 ) குறையாத மட்டத்தில் தகைமைச்சான்றிதழைப்பெற்றிருத்தல் வேண்டும் . அனுபவம் : 02 வருட துறைசார் அனுபவம் . வயதெல்லை : 30 - 45 வரை
முகாமைத்துவ உதவியாளர் - 01
கல்வித்தகைமை : கா.பொ.த ( சா / த ) பரீட்சையில் ஒரே தடவையில் கணிதம் , தமிழ் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தியும் கா.பொ.த ( உ / த ) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி மற்றும் பதவியுடன் தொடர்புடைய வேறு தகைமைகள் . அனுபவம் : 02 வருட துறைசார் அனுபவம் . வயதெல்லை : 23 - 30 வரை
உதவி போதனாசிரியர் -01 ( இயந்திரவியல் )
கல்வீந்தகைமை : கா.பொ.த ( சா / த ) பரீட்சையில் இரண்டு தடவைகளுக்கு மேற்படாது கணிதம் உட்பட 2 பாடங்களில் திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும் . ஒவ்வொரு பதவி தன்மைக்கேற்ப மூன்றாம் நிலை , தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழிற்திறன் மட்டம் ( NVQ level 04/05 ) குறையாத மட்டத்தில் தகைமைச்சான்றிதழைப்பெற்றிருத்தல் வேண்டும் . அனுபவம் : 02 வருடம் துறைசார் அனுபவம் . வயதெல்லை | 25 - 30 வரை
விளையாட்டு பயிற்றுவிப்பாளர் - 04
கல்வித்தகைமை : கா.பொ.த ( சா / த ) பரீட்சையில் ஒரே தடவையில் கணிதம் , தமிழ் உட்பட 4 பாடங்களில் திறமை சித்தி உட்பட 6 பாடங்களில் சித்தியும் கா.பொ.த ( உ / த ) பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி , மற்றும் பதவியுடன் தொடர்புடைய வேறு தகைமைகள் . அனுபவம் : 02 வருடம் துறைசார் அனுபவம் . வயதெல்லை : 25 - 45 வரை
விளையாட்டு மைதான உதவியாளர் ( 01 )
கல்வித்தகமை : கா.பொ.த ( சா / த ) சித்தி பெற்றிருத்தல் வேண்டும் . அனுபவம் : 02 வருடம் துறைசார் அனுபவம் . வயதெல்லை : 18-30 வரை
நியமனம் பெறுபவர்களுக்கு அரசாங்கத்தின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப அடிப்படைச் சம்பளமும் ஏனைய கொடுப்பனவுகளும் வழங்கப்படும் . விண்ணப்பங்களை விளம்பர திகதியில் இருந்து ஏழு நாட்களுக்குள் கீழ்வரும் முகவரிக்கு பதிவுத்தபாலில் அனுப்பி வைக்கவேண்டும் .
பிரதி பணிப்பாளர் - நீர்வாகம்,
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம்,
தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம். ஹட்டன்

Post a Comment (0)