அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களின் அறிவூ மற்றும் திறன்களை மேம்படுத்தலுக்கான வரைதல் போட்டி 2020


காலநிலை மற்றும் வானிலை மாற்றத்தினாலும் இயற்கை ஆபத்துக்களின் தீவிரத்தன்மையினாலும் அனர்த்தங்கள் மற்றும் பாதிப்புக்கள் அதிகரித்தவாறு உள்ளது . அனர்த்த ஆபத்து முகாமைத்துவத்தில் முன்னாயத்தநிலை , தணிப்பு மற்றும் அனர்த்த முன்னெச்சரிக்கை தொடர்பாக அதிக கவனம் எடுப்பதன் மூலம் உயிர்கள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களைக் குறைக்கலாம் . அத்துடன் மீளுகைச் செயற்பாடுகளுக்கு செலவிடும் நிதியினை நாட்டின் அபிவிருத்திக்கு உபயோகிக்கலாம் . அனர்த்த முகாமைத்துவ துறையில் ஈடுபட்டுள்ள தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச மட்டத்தில் மாநாடொன்றினை 2020 . 03 . 16 - 2020 . 03 . 18 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன .

இந்த சர்வதேச மாநாட்டின் ஓர் செயற்பாடாக பாடசாலை மணவர்களின் அனர்த்த் முகாமைத்துவ செயற்பாடுகள் பற்றிய அறிவு மற்றும் அவதானிப்புக்களை மேம்படுத்துவதற்காகவும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நாடளாவிய ரீதியில் சித்திரப் போட்டியொன்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் கல்வி அமைச்சின் பங்களிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது .

சித்திரம் வரைதலுக்கான தலைப்புக்கள் 
1.அனர்த்தங்கள் ஏற்படுவதற்கான மனித செயற்பாடுகள் .
2. அனர்த்ததங்களை தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் .
3. அனர்த்தங்களின்போது கிடைக்கப்பெற்ற அனுபவங்கள் .
4. பாதுகாப்பான சமூகத்திற்காக அனர்த்த ஆபத்துக்களைக் குறைத்தல் .

மேற்கூறப்பட்ட தலைப்புக்களின் கீழ் உங்களது சித்திரங்களை வரைந்து தகுந்த தலைப்பினை இடவும்

சித்திரப் போட்டி நடாத்தப்படும் தொகுதிகள்
| தொகுதி இலக்கம். |தொகுதி
1. 6 - 7 ஆம் தரம்
2. 8 - 9 ஆம் தரம்
3. 10 - 11 ஆம் தரம்
4. 12 - 13 ஆம் தரம்

சித்திரம் வரைதலுக்காக 18 x 14 அங்குல அளவிலாான கடதாசியைப் பயன்படுத்தவும்

| சித்திரம் வரைவதற்கு உபயோகிக்க வேண்டிய ஊடகம்
• சித்திரம் வரைவதற்காக பெஸ்டல் மற்றும் நீர் வர்ண ஊடகம் மட்டும் பயன்படுத்தப்படல் வேண்டும் . |

சித்திரங்களை மதிப்பீடு செய்தல்
• மாவட்ட மட்டம்
• மாகாண மட்டம்
• நாடளாவிய ரீதியான மட்டம்
• தேசிய மட்டம்

நாடளாவிய ரீதியில் 100 சித்திரங்கள் தெரிவு செய்யப்படும் . அவ்வாறாக தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களும் கொழும்புக்கு வரவழைக்கப்பட்டு மதிப்பீட்டுக் குழுவொன்றின் முன் வரையப்படும் சித்திரங்களிலிருந்து தேசிய மட்டத்திலான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவர் .

பரிசில் வழங்கல் அனர்த்த ஆபத்து முகாமைத்துவம் தொடர்பான சர்வதேச மாநாடு நடைபெறும் 2020 . 03 . 16ஆம் திகதி ஆரம்ப விழாவின்போது பிரதம அதிதிகளிடமிருந்து வெற்றியாளர்கள் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் பெறுவார்கள்

பரிசில்கள் தொடர்பான விபரங்கள்
1ஆம் இடம் | ரூ . 30 , 000 . 00 மற்றும் சான்றிதழ்
2ஆம் இடம் | ரூ . 25 , 000 . 00 மற்றும் சான்றிதழ்
3ஆம் இடம் | ரூ . 20 , 000 . 00 மற்றும் சான்றிதழ்
4ஆம் இடம் | ரூ . 15 , 000 . 00 மற்றும் சான்றிதழ்
5ஆம் இடம் | ரூ . 10 , 000 . 00 மற்றும் சான்றிதழ்

ஓவ்வொரு தொகுதியிலிருந்தும் முதல் ஐந்து இடங்களையும் பெறும் வெற்றியாளர்கள் 5 பேர் வீதம் தெரிவுசெய்யப்படுவர்

சித்திரங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முறை
வகுப்பாசிரியர் மற்றும் பாடசாலை அதிபரின் சான்றுப்படுத்தலுடன் விண்ணப்பத்தினை சித்திரத்தின் பின்புறத்தில் ஒட்டி 2020 . 02 . 21ஆம் திகதிக்கு முன் கிடைக்கும்படி பணிப்பாளர் நாயகம் , இல . 120 / 2 , வித்யா மாவத்தை , கொழும்பு 07 எனும் முகவரிக்கு அனுப்புதல் வேண்டும் .

சித்திரம் இடப்பட்ட உறையின் இடது பக்க மேல் மூலையில் ' சித்திரப் போட்டி 2020 , தொகுதி இல . . . மற்றும் மாவட்டம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும் .

விண்ணப்பங்களை பெற இங்கே கிளிக் செய்யவும். 
https://drive.google.com/folderview?id=1NFgDgY-AK_71Ed7V96a3sdQWvTkLpjvZ
أحدث أقدم