பதிவாளர் நாயகம் திணைக்களம்
தமிழ் மொழி மூலம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் பதவி - அம்பாறை மாவட்டம்
1. விண்ணப்பதாரர் உரிய பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் பிரிவினுள் நிரந்தர வதிவிடதாரியாகவும் மற்றும் போதியளவான ஆதனத்திற்கு உரித்தான பிரதேசவாசிகளின் மதிப்பினைப் பெறும் ஆளுமையுடையவராகவும் இருத்தல் வேண்டும்.
2. இந்தப் பதவிக்காக ஆண்ஃ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்க இயலும்.
3. விண்ணப்பம் கோரப்படும் இறுதித் தினம், விண்ணப்பதாரியின் வயது 30 வருடங்களுக்கு குறையாதிருத்தல் வேண்டும் என்பதுடன், 50 வருடங்களுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும். (இளைப்பாற்றப்படும் உச்ச வயதெல்லை 65 வருடங்களாகும்.
4. பிரிவில் மக்களின் மொழித் தேவைக்கிணங்க இரண்டாம் மொழியில் கடமையினை மேற்கொள்ளும் இயலுமையுடன் இரண்டுக்கு மேற்படாத தவணைகளில் தமிழ் மொழிக்கான சிறப்பு சித்தி உட்பட க. பொ. த. (சா. த.) பரீட்சையில் குறைந்தது சிறப்புச் சித்திகள் மூன்றுடன் (03) ஆறு விடயங்களில் (06) சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அதற்கு சமமான பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். கருத்திற் கொள்ளவும்.- க. பொ. த. (சா. த.) அல்லது அதற்கு சமமான பரீட்சையில் ஒரு விடயம் இரண்டு பகுதிகளாக சித்தியடைந்திருக்கும் சந்தர்ப்பங்களில், அது ஒரு விடயமாக கருதப்படல் வேண்டும். அந்த விடயப் பகுதிகள் இரண்டும் சித்தியடைந்திருந்தால் மாத்திரமே அவ்விடயம் சித்தியடைந்ததாகக் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.
5. பிரிவில் அனைவருக்கும் அல்லது அநேகமானவர்களுக்கு இலகுவாக நெருங்கக்கூடிய பிரிவின் மத்திய இடமொன்றில் அமைந்த பதவியின் கௌரவத்தினை பாதுகாக்கும் விதத்திலான கட்டிடத்தில் அலுவலகத்தினை அமைப்பதற்கும் இயலுமாயிருத்தல் வேண்டும். வைத்தியசாலையினுள் பிறப்பு, இறப்புக்களினை பதிவு செய்யும் பிறப்பு, இறப்பு பதிவாளர்களினை சேர்த்துக் கொள்ளும் பொழுது விண்ணப்பதாரர் அரசாங்க வைத்தியசாலையில் போதுமான அலுவலக வசதி கிடைக்கப்பெறாத சந்தர்ப்பங்களில் வைத்தியசாலைக்கு 01 கி. மீ. வரையிலான தூரத்தில் பிரிவில் அமைந்துள்ள பொருத்தமான வேறு கட்டிடத்தில் அலுவலகத்தினை அமைப்பதற்கு இயலுமாயிருத்தல் வேண்டும்.
6. விண்ணப்பம் கோரப்படும் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்தல் பிரிவிற்கு உட்புகுத்தப்படும் கிராம பட்டியல்கள்/ கிராம அலுவலர் பிரிவு, கல்வி மற்றும் ஏனைய தகைமைகள் ஆகிய மேலதிக விபரங்கள் கீழ்க் குறிப்பிடப்படும் அட்டவணையில் குறிப்பிடப்பட்ட மாவட்டச் செயலகம், பிரதேச செயலகம் அல்லது உரிய காணி மற்றும் மாவட்டச் செயலகம், கிராம அலுவலர் அலுவலகம், சமுர்த்தி அபிவிருத்திச் சங்க அலுவலகம் மற்றும் தபால் அலுவலகம் ஆகிய பிரிவின் பிரசித்தமான இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல்களில் பார்த்துக்கொள்ள இயலும்.
7. இதற்காக தேவையான விண்ணப்பங்கள் மற்றும் கிராம பட்டியல்கள்ஃ கிராம அலுவலர் பிரிவுகள் உள்ளடங்கிய ''இணைப்பு 1'' உரிய மாவட்டத்தின் மாவட்டச் செயலாளர் (அரசாங்க அதிபர்) அலுவலகத்தில் மற்றும் உரிய காணி மற்றும் மாவட்டப் பதிவகத்தில் அல்லது பிரதேச செயலகத்தில் பெற்றுக்கொள்ள இயலும். விண்ணப்பம் பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வெப் தளத்திலும் (www.rgd.gov.lk) பெற்றுக்கொள்ள இயலும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2020, திசெம்பர் மாதம் 14 ஆந் திகதி அல்லது அதற்கு முன்பு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.
Application

Post a Comment (0)