முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - களுத்துறை மாவட்டம்

 முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பதிவாளர் பதவி - களுத்துறை மாவட்டம்




இங்கு கீழே அட்டவணையில் குறிப்பிடப்பட்ட பிரிவுகளுக்குரிய முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. விண்ணப்பதாரர் உரிய முஸ்லிம் விவாகம் பதிவு செய்தல் பிரிவினுள் நிரந்தர வதிவிடதாரியாகவும் மற்றும் போதியளவான ஆதனத்திற்கு உரித்தான பிரதேசவாசிகளின் மதிப்பினைப் பெறும் ஆளுமையுடையவராகவும் இருத்தல் வேண்டும்.

2. இந்தப் பதவிக்காக முஸ்லிம் ஆண்கள் மாத்திரம் விண்ணப்பிக்க இயலும்.

3. விண்ணப்பம் கோரப்படும் இறுதித் தினம், விண்ணப்பதாரியின் வயது 30 வருடங்களுக்கு குறையாதிருத்தல் வேண்டும் என்பதுடன், 50 வருடங்களுக்கு மேற்படாதிருத்தல் வேண்டும். (இளைப்பாற்றப்படும் உச்ச வயதெல்லை 65 வருடங்களாகும்.)

4. முஸ்லிம் விவாகப் பதிவாளர் பதவிக்காக விண்ணப்பிப்பவர்கள் விவாகமானவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் தாரமிழந்தவர் அல்லது விவாகரத்தானவராக இருத்தல் கூடாது.

5. பிரிவில் மக்களின் மொழித் தேவைக்கிணங்க இரண்டாம் மொழியில் கடமையினை மேற்கொள்ளும் இயலுமையுடன்

இரண்டுக்கு மேற்படாத தவணைகளில் சிங்களம் ஃ தமிழ் மொழிக்காக (பதவிக்குரிய மொழி மூலம்) சிறப்பு சித்தி உட்பட க. பொ. த. (சா. த.) பரீட்சையில் குறைந்தது சிறப்புச் சித்திகள் மூன்றுடன் (03) ஆறு விடயங்களில் (06) சித்தி பெற்றிருத்தல் வேண்டும். அல்லது அதற்கு சமமான பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். கருத்திற் கொள்ளவும்.- க. பொ. த. (சா. த.) அல்லது அதற்கு சமமான பரீட்சையில் ஒரு விடயம் இரண்டு பகுதிகளாக

சித்தியடைந்திருக்கும் சந்தர்ப்பங்களில், அது ஒரு விடயமாக கருதப்படல் வேண்டும். அந்த விடயப் பகுதிகள் இரண்டும் சித்தியடைந்திருந்தால் மாத்திரமே அவ்விடயம் சித்தியடைந்ததாகக் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

மௌலவி சான்றிதழ் அல்லது அராபி டிப்ளோமா சான்றிதழ் பெற்றிருத்தல், மேற்குறிப்பிடப்பட்ட அடிப்படைத் தகைமைகளினைப் ப{ர்த்தி செய்திருத்தலாக கருதப்படும்.

6. பிரிவில் அனைவருக்கும் அல்லது அநேகமானவர்களுக்கு இலகுவாக நெருங்கக்கூடிய பிரிவின் மத்திய இடமொன்றில் அமைந்த பதவியின் கௌரவத்தினை பாதுகாக்கும் விதத்திலான கட்டிடத்தில் அலுவலகத்தினை அமைப்பதற்கு இயலுமாயிருத்தல் வேண்டும்.


ப{ர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2020, திசெம்பர் மாதம் 14 ஆந் திகதி அல்லது அதற்கு முன்பு அட்டவணையில் குறிப்பிடப்பட்ட முகவரிக்குக் கிடைக்குமாறு பதிவுத் தபாலில் அனுப்புதல் வேண்டும்.



Application
أحدث أقدم