நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழவகைகள், மிளகாய், வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு செய்கை மேம்பாட்டு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப விவசாய இராஜாங்க அமைச்சு
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளர் தேர்ச்சியற்ற - சேவைத் தொகுதி 2 இன் (MN-01 -2016) இன் கீழ் கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளர் III ஆம் தரத்திற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதன் பொருட்டான திறந்த போட்டிப் பரீட்சை -2020
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தில் நாடெங்கிலும் வெற்றிடமாகவுள்ள கமநல சேவை நிலைய முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு மாவட்ட மட்டத்தில் ஆட்சேர்ப்புச் செய்வதன் பொருட்டு பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைவாக தகமைகளைப் ப{ர்த்தி செய்துள்ள விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இப் பரீட்சையை 2021 ஆம் வருடம் பெப்புருவரி மாதம் நடாத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுவான தகைமைகள் :
1 . இலங்கைப் பிரசையாக இருத்தல் வேண்டும்.
2. நன்நடத்தை உடையவராகவும் நாட்டின் எந்தப் பிரதேசத்திலும் கடமையாற்றுவதற்கு பொருத்தமான, உடல் மற்றும்உள ஆரோக்கியம் உடையவராக இருத்தல் வேண்டும்.
3. விண்ணப்பப்படிவம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் தினத்தன்று வயது 18 இற்குக் குறையாத 30 இற்கு மேற்படாத நபராக இருத்தல் வேண்டும். (''அதன் பொருட்டு 2002.12.04 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னரோ 1990.12.04 ஆந் திகதி அல்லது அதற்கு பின்னரோ பிறந்த திகதியைக் கொண்டவர்கள் மட்டும் இதன் பொருட்டு விண்ணப்பிப்பதற்கு தகுதியுள்ளவராவர்'')
4. அரசாங்க சேவை ஆணைக்குழுவின் அலுவலக நடைமுறை விதியின் X ஆம் அத்தியாயத்திற்கமைய அரசாங்க சேவைக்கு நியமிக்கப்படுவதற்கு பொருத்தமற்ற நபரல்லாது இருத்தல் வேண்டும்.
5. மாவட்டத்திற்கு உரித்துடையதாதல் தொடர்பாக இருக்க வேண்டிய தகமைகள். (மாவட்ட வெற்றிடத்தின் பொருட்டு போட்டியிடுவதற்காயின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுள் ஒன்றேனும் பூரணப்படுத்தியிருக்க வேண்டும். )
I. விண்ணப்பதாரி அம் மாவட்டத்தினுள் பிறந்தவராக இருக்க வேண்டும்.
II. பரீட்சையின் பொருட்டு தகைமைகளைப் ப{ர்த்தி செய்ய வேண்டிய இறுதித் தினத்திற்கு முன்னதான 05 வருட காலத்திற்குள் குறித்த நபர் அம்மாவட்டத்தினுள் ஆகக் குறைந்தது 03 வருடங்களேனும் தொடர்ச்சியான நிரந்தரப் பதிவினைக் கொண்டிருக்க வேண்டும்.
III. விண்ணப்பதாரி தொடர்ச்சியாக 05 வருடங்கள் அம் மாவட்டத்தில் தமது இடைநிலை பாடசாலைக் கல்வியைப் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித் தகைமைகள் :
(அ) சிங்களம்/தமிழ்/ஆங்கில மொழி, கணிதம் மற்றும் ஏனைய இரு பாடங்களில் திறமைச் சித்தி உள்ளடங்கலாக ஒரே தடவையில் (06) பாடங்களில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சித்தி பெற்றிருத்தல்.
மற்றும்
(ஆ) கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் ஆகக் குறைந்தது ஒரு பாடத்திலேனும் (01) (பொது வினாப்பத்திரம் தவிர) சித்தியடைந்திருத்தல்.
வேறு தகைமைகள் :
1. தொழிற் தகைமைகள் மற்றும் அனுபவம் விசேட தகைமைகளாகக் கருதப்படும்.
2. அனைத்து விண்ணப்பதாரிகளும் பதவிக்குரிய அனைத்து தகைமைகளையும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் பூரணப்படுத்தியிருத்தல் அவசியமாகும்.
பரீட்சைக் கட்டணம்.- விண்ணப்பதாரரினால் பரீட்சைக் கட்டணமாகச் செலுத்தப்படவேண்டிய ரூபா 600.00 பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பு 20-03-02-13 இன் கீழ் வருமானத்திற்கு வரவாகும் வகையில் நாடெங்கிலும் உள்ள எந்தவொரு தபால் அல்லது உப தபால் நிலையத்திற்காயினும் பணமாக செலுத்தி விண்ணப்பதாரியின் பெயரில் பெற்றுக் கொண்ட பற்றுச் சீட்டை, அதன் ஒரு விளிம்பின் மூலம் விண்ணப்பப் படிவத்தின் குறித்த இடத்தில் கழறாதவாறு ஒட்டுதல் வேண்டும். பரீட்சையின் பொருட்டு காசுக் கட்டளையோ முத்திரையோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பரீட்சையின் பொருட்டு செலுத்தப்பட்ட கட்டணம் எந்தவொரு காரணத்தினாலும் மீளச் செலுத்தப்படுதல் அல்லது வேறு பரீட்சையொன்றின் பொருட்டு மாற்றிக் கொள்ளப்பட மாட்டாது. தொடர் தேவையின் பொருட்டு பற்றுச்சீட்டின் நிழற் பிரதியொன்றை தம்வசம் வைத்திருத்தல் பயனுள்ளதாக அமையும்.
விண்ணப்பம்
கடிதஉறை

Post a Comment (0)